உடற் தொகுதிகள்

வளங்கள்


தோல்
ஸோரையாஸிஸ் (PSORIASIS) PDF Print மின்னஞ்சல்

ஸோரையாஸிஸ் (PSORIASIS)

 

இது நீண்டகாலம் நீடிக்கின்ற தொற்றாத சுயநிர்ப்பீடன நோயாகும். இது தோல் மற்றும் என்பு மூட்டுக்களைப் பொதுவாகப் பாதிக்கும். இது தோலில் சிவப்பு நிறமான மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் இந்த தோலானது உரிந்து செல்லும். சில நோயாளிகளில் தோல் மாற்றங்கள் இல்லாமலும் போகலாம். இந்நோயில் உருவாகும் சிவத்த தடிப்புகள் தோலில் அழற்சி ஏற்படுவதனால் ஏற்படுகின்றன. இந்த இடங்களில் தோலானது அதிகளவில் பெருக்கமடைவதன் காரணமாக தோலானது உரியத் தொடங்கும். இது வெள்ளை நிறமான செதில்களாக உரியத்தொடங்கும். இந்தத் தோல் மாற்றங்கள் அதிகமாக முழங்கை மற்றும் முழங்கால்களில் ஏற்படும். எனினும் தலை மற்றும் இலிங்க உறுப்புக்களில் ஏற்படலாம்.

 

இந் நோயானது நீண்டகாலம் தொடர்ச்சியாகவோ இடைவிட்டோ ஏற்படலாம். இது சில வேளைகளில் உடல் முழுவதும் ஏற்படக்கூடும். இந்நோயானது மூட்டுக்களிலும் அழற்சியை ஏற்படுத்தி மூட்டுவாதமானது ஏற்படலாம். இந்நோயுள்ளவர்களில் 10-15% நோயாளிகளுக்கு மூட்டுவாதம் உள்ளது.

 

இந்நோய்க்கான காரணமானது இன்னமும் அறியப்படாத போதும் சில பரம்பரைக் காரணிகள் இதற்கும் பொறுப்பாக இருக்கும். இந்நோயின் அறிகுறிகள் மன அழுத்தம், ஸ்டீரொயிட் மருந்துகள், அதிக மதுபானப் பாவனை, புகைத்தல் ஆகியன காரணமாக அதிகரிக்கலாம். பல மருந்துகள் இந் நோய்க்கு உள்ள போதும் நோயை முற்றாக குணப்படுத்தக்கூடிய மருந்தானது இன்னமும் கண்டறியப்படவில்லை.

 

இந்நோயின் பல வகைகள் உள்ளன. இவற்றுள் தடிப்பான தோல் மாற்றம் மிகவும் பொதுவான வகை ஆகும். இது 80-90% முதலான நோயாளிகளைப் பாதிக்கும். இது தோலானது அழற்சிக்குட்பட்டு பின்னர் உரிந்து செல்லும் நிலையைக் காட்டும்.

 

மடிப்புகளிடையே மூட்டின் பின் புறங்களில் மற்றும் இலிங்க உறுப்புக்களைச் சுற்றி ஏற்படும் நோயானது உராய்வு மற்றும் வியர்வை ஆகியவற்றால் மோசமடைவதுடன் இது பங்கசுக்கள் தொற்றுக்கும் காரணமாகலாம்.

 

கொப்புளங்கள் தோன்றும் ஸோரையாஸிஸ் மற்றும் நகங்களில் ஏற்படும் ஸோரையாஸிஸ் ஆகியன இதன் வெவ்வேறு வடிவங்களாகும். 

 
முகப்பரு ஏற்படுவதற்கான காரணங்கள் PDF Print மின்னஞ்சல்

 

முகப்பரு ஏற்படுவதற்கான காரணங்கள்.

 

இது தோலிலுள்ள புடைப்புக்கள் அடைக்கப்படுவதினால் ஏற்படுகிறது. அதிகளவு கெரற்றின் உருவாக்கம், கெரற்றின் மற்றும் நெய்ச்சுரப்பிகளின் தேக்கம் ஆகியனவே இதன் ஆரம்பகட்டம் ஆகும். நெய்ச்சுரப்பிகளின் பருமன் அதிகரித்தல், அவற்றின் சுரப்பு கூடுதல் ஆகியன அன்ட்ரஜன் எனப்படும் ஆண்தன்மைக்குரிய ஹோர்மொன் அதிகரிப்பினால் ஏற்படும்.

 

இது மேற்கொண்டு மூடிய பருவாகவோ (வெண்புள்ளி) கறுத்த / திறந்த பருவாகவோ மாறலாம். அத்துடன் இதன்போது இயற்கையில் தோலில் காணப்படும் பக்டீரியாவான ப்ரொபியொனொபக்டீரியும் அக்னி எனப்படும் கிருமியானது அழற்சியை ஏற்படுத்தலாம். இதனால் கொப்புளங்கள். தொற்றுக்குள்ளான கொப்புளங்கள் ஆகியன ஏற்படலாம். இதன் காரணமாக தோலானது சிவப்பதுடன் தோலின் மேல் தழும்புகள் அல்லது நிறம் அதிகரிப்பானது ஏற்படலாம்.

 

முகப்பருவானது பரம்பரைக்காரணிகளாலும் ஏற்படலாம். அத்துடன் ஏனைய பல அம்சங்களும் இதற்கு காரணமாக அமைகின்றன. குடும்பத்தில் யாருக்கேனும் பருக்கள் காணப்படல் அல்லது வயது குறைந்த காலத்தில் முகப்பரு காணப்படுதலானது பருக்கள் உருவாகும் சாத்தியத்தை அதிகரிக்கும்.

 

அவ்வாறே ஹார்மோன் செயற்பாடுகள் மாதவிடாய் மற்றும் பூப்பெய்தும் காலங்களில் அதிகரிப்பதினால் புடைப்புச்சுரப்பிகள் பெரிதாக வளர்ந்து நெய்ச்சுரப்பை அதிகளவு சுரக்கும். அழற்சி. தோல் அரிப்பு மற்றும் சொறிதல் ஆகியன பருக்களின் அழற்சியை ஆரம்பிக்கும்.

 

மன அழுத்தமானது பருக்களை அதிகரிக்கச்செய்கின்ற முக்கியமான ஒரு காரணியாகும். இது நோயின் தீவிரத்தை கூட்டும். தோலின் குழிகள். துவாரங்களில் உள்ள பக்டீரியாக்கள் காற்றின்றிய வாழிகளாகும். இவையும் பருக்களை அதிகப்படுத்தும்.

 

உட்சேபம் / தொகுப்பை அதிகரிக்கச்செய்யும் ஸ்டீரொயிட்டுகள் இதனை மோசமாக்கும். சிற்சில இரசாயன பதார்த்தங்களுக்கு தோலானது வெளிக்காட்டப்படுவதாலும் பருக்கள் அதிகரிக்கலாம். இவை தவிர அம்பெடமின் போன்ற உட்சாகமூட்டும் போதை மருந்துகளாலும் முகப்பருக்கள் அதிகரிக்கும்.

 

 

 
ஒவ்வாமையால் ஏற்படும் தோல் பாதிப்பு நோய்ச்சிக்கல்களும் சிகிச்சையும் PDF Print மின்னஞ்சல்

ஒவ்வாமையால் ஏற்படும் தோல் பாதிப்பு

 

நோய்ச்சிக்கல்களும் சிகிச்சையும்

 

இந்நோய் காரணமாக பிளவுபட்ட தோலானது பக்டீரியாக்களால் தொற்றுக்கு உள்ளாகிறது. இது பொதுவாக ஸ்டபைலோகொக்கஸ் கிருமியால் ஏற்படுகிறது. ஸ்ரெப்ராகொக்கஸ் கிருமியும் இந்தப்பகுதிகளை தாக்கலாம். இவற்றுடன் வைரஸ் தொற்றும் பரவலாக ஏற்படலாம். ஹேபிஸ் வகை வைரஸினால் மிகவும் தீவிரமான நோய்த்தொற்றானது இந்நோயுள்ளவ்ர்களில் ஏற்படுத்தப்படலாம்.

 

இந்தப்பாதிப்பு உள்ளவர்களில் கண்களின் விழித்திரையில் அழற்சி, கண்வில்லை தடிப்பு ஆகியனவும் ஏற்படலாம். அத்துடன் தீவிரமான வளர்ச்சிக் குறைபாடும் ஏற்படலாம்.

 

பரிசோதனைகள்

 

இந்நோயானது பொதுவாக அதன் குணங்குறிகளாலேயே இனங்காணப்படுகிறது. அத்துடன் குருதிப்பாயத்தில் IgE வகை பிறபொருளெதிரியும் அதிகளவில் காணப்படலாம். குருதியில் சில குறிப்பிட்ட வகை வெண்குழியங்கள் எண்ணிக்கையில் அதிகரித்துக் காணப்படும்.

 

பெரும்பாலான சிறுவர்களில் இந்நோயானது தானாக குணமடைவதுடன் 50% ஆனவர்களில் 6 வயதில் நோயானது குணமடையும். காலம் தாழ்த்தி வெளிப்படும் நோயானது பொதுவாக நீண்டகாலத்திற்கு நீடிக்கும் தன்மையானது.

 

சிகிச்சை

பொதுவான நடைமுறைகளுள் மிக முக்கியமானது ஒவ்வாமை உருவாகக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள், உடைகள், உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பதாகும். அத்துடன் பாற்பொருட்களை தவிர்த்தலானது சில சிறுவர்களில் மட்டுமே பயனளிக்கும்.

 

தோலில் பூசும் மருந்துகள்

 

இது பெரும்பாலான நோயாளிகளில் நோயை குணப்படுத்துவதுடன் பக்க விளைவுகளும் குறைவாகும். அழற்சியை குறைக்கின்ற ஸ்டீரொயிட் மருந்துகள் இவற்றுள் முக்கியத்துவம் பெறுகின்றன.

 

இவற்றுடன் சிலவகை பக்டீரியா கொல்லி மருந்துகள் தொற்றுக்குள்ளான காயங்களுக்கு வழங்கப்படலாம். தோலில் ஏற்படும் அரிப்பைக் குறைப்பதற்கு பிரிட்டோன் போன்ற மருந்துகள் பயன்படலாம்.

 

இவற்றுடன் உடலின் நிர்ப்பீடனத்தைக் குறைக்கின்ற மருந்துகள் இந்நோயால் தீவிரமான சமூக வாழ்க்கைப் பாதிப்பு ஏற்பட்டவர்களில் பயன்படுத்தப்படலம்.

 
ஒவ்வாமையால் ஏற்படும் தோல் பாதிப்பு PDF Print மின்னஞ்சல்

ஒவ்வாமையால் ஏற்படும் தோல் பாதிப்பு

 

இது பொதுவாக குழந்தைப் பருவத்தில் ஆரம்பிக்கின்றது. இதற்கான உண்மையான காரணமானது அறியப்படாதபோதும் சில குறிப்பிட்ட வகையான வெண்குழியங்கள் தோலில் முடுக்கி விடப்படுவதனால் தோலானது அழற்சித் தாக்கத்திற்கு உள்ளாகிறது. இது சந்தேகத்திற்கு இடமற்ற விதமாக பரம்பரைகளுக்கு கடத்தப்படுவதுடன் பல சுற்றாடல் காரணிகளாலும் பாதிக்கப்படுகிறது. பொதுவாக குடும்பத்தில் ஒருவருக்கேனும் ஆஸ்துமா, பீனிசம், ஒவ்வாமை போன்ற ஏதேனும் ஒரு நோய் காணப்படும்.

 

இந்நோயானது வீரியமான இரசாயனப் பதார்த்தங்கள் செயற்கையான நூலில் செய்யப்பட்ட ஆடைகள், தொற்றுக்கள் ஆகியவற்றால் தூண்டப்படலாம். குழந்தைகளில் பல் முளைக்கும் பருவத்தில் இது அதிகரிக்கலாம். அத்துடன் மனப்பதகளிப்பு, படபடப்பு போன்ற காரணிகளும் இதனை சிலரில் அதிகரிக்கச் செய்யும். நாய் மற்றும் பூனைகளின் உரோமங்கள் ஒவ்வாமைத் தாக்கங்களை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக பாற்பொருட்கள் இந்த தோல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை.

 

இந்நோயுள்ளவர்களில் காணப்படும் குணங்குறிகள் பின்வருமாறு

 

பொதுவாக தோலில் அரிப்பை ஏற்படுத்தும் சிவப்பான தோலை உரியச் செய்யும் மாற்றங்கள் ஏற்படும். இவை குறிப்பாக முழங்கைகள், கணுக்கால்கள், முழங்கால் மடிப்புகள், கழுத்தின் பின்புறம் ஆகியவற்றில் ஏற்படும்.

 

குழந்தைகளில் தோல் மாற்றமானது பொதுவாக முகத்தில் ஆரம்பிக்கும். பின்னர் உடலின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.

 

சடுதியாக ஏற்படும் காயங்களில் இருந்து நீரானது கசியலாம். அத்துடன் கொப்புளங்களும் ஏற்படலாம். தொடர்ச்சியாக அரிப்பிற்கு உள்ளான பகுதிகளை தேய்ப்பதனால் தோலானது தடிப்பதுடன் தோலிலுள்ள ரேகைகளும் தடிப்படையும்.

 

இவற்றுடன் நகங்களும் பாதிப்பிற்கு உள்ளாகலாம். சிலரில் கால்களில் தோலானது மீனின் செதில் போன்று உரியவும் வாய்ப்பு உள்ளது.

 
முகப்பருவிற்கான சிகிச்சை PDF Print மின்னஞ்சல்

 

முகப்பருவிற்கான சிகிச்சை

 

முகப்பருவிற்கான சிகிச்சையில் தோலில் பூசும் விற்றமின் A யின் செயற்கைத் தொகுப்பானது பயன்படுத்தப்படும். இவை மிகவும் பாதகமற்ற பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும். அத்துடன் தோலில் இவை குறிப்பிடத்தக்களவு அரிப்பை ஏற்படுத்தும். இந்த ரெட்டினொயிட் மருந்தானது கலப்பிரிகை மற்றும் கல இறப்பை கட்டுப்படுத்தும். இதனால் இது தோலில் ஏற்படும் அதிக கெரற்றின் படிவுகளை குறைக்கும்.  ரெட்டினோல் எனப்படும் மற்றொரு விற்றமின் A வகையானது இதனைவிட மெல்லிய விளைவுகளை ஏற்படுத்தும். தோலில் பூசும் இம்மருந்துகள் முகப்பருவை ஆரம்பத்தில் அதிகரிக்க செய்யலாம்.

 

 

 மேற்குறிப்பிட்ட மருந்துகள் வாய்மூலம் உள்ளெடுக்கப்படலாம். இவை 4-6 மாதங்களுக்கு வழங்கப்படும் இவை பிரதானமாக சுரப்பிகளிலிருந்து எண்ணெய் ஆனது அதிகம் சுரக்கப்படுவதை தடுக்கும். இது ஈரல் பாதிப்பு, போன்றவற்றை ஏற்படுத்த கூடியதாக இருப்பதனால் சிகிச்சையின் போதும் சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்னரும் இரத்தப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இரத்தத்தில் காணப்படும் கொழுப்புகளும் கண்காணிக்கப்பட வேண்டும். கர்ப்பிணிப்பெண்கள் இம்மருந்தை உட்கொண்டால் சிசுவில் விகாரங்களை ஏற்படுத்தும். இதனால் பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும்.

 

 

கந்தகமானது புராதான காலங்களில் முகப்பருவிற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டது. இது நெய்ச்சுரப்பிகளினுள் இலகுவாக உட்செல்லும். இவற்றைவிட தோலானது பாதிக்கப்பட்ட இடத்தில் உராய்வு மூலம் அரியப்படுவதனால் சிகிச்சை அளிக்கப்படும். எனினும் இந்த சிகிச்சையானது தழும்புகளை முகத்தில் ஏற்பத்தலாம்.

  

 

இவற்றுடன் நீல மற்றும் சிவப்பு நிற ஒளிச்சிகிச்சை மூலம் முகப்பருவிற்கு சிகிச்சையானது வழங்கப்படலாம். லேசர் சிகிச்சை மூலம் முகப்பருவின் பின்னரான தழும்புகள் குணமாக்கப்படலாம். இந்த சிகிச்சை மூலம் உரோமம் வளரும் புடைப்புகள் எரிக்கப்படலாம். அல்லது அதிக எண்ணெயை உருவாக்கும் நெய்ச்சுரப்பியை எரிக்கலாம். அத்துடன் தோலிலுள்ள கிருமிகள் டலில் ஒட்சிசன் உருவாகுவதை தூண்டி அவற்றை இறக்கச்செய்யலாம்.

 

 

 
<< Start < Prev 1 2 3 4 5 Next > End >>

பக்கம் 4 of 5